தெய்வங்கள்


அருள்மிகு ஸ்ரீ வேண்டவராசி அம்மன்

தர்மம்,சத்தியம்,பக்தி,ஞானம் இவைகள் நான்கும் பிறப்பிடமாக உள்ள பாரத தேசத்தில் உள்ள திவ்ய க்ஷேத்திரங்கள்,நதிகள்,மலைகள் யாவும் சக்தியாகவே கருதப்படுகின்றன. பாரத தேசமே பாரத சக்தி என வழங்கப்படுகிறது. கங்கை, யமுனை, துங்கப்பத்ரை, கிருஷ்னை, நர்மதை, தபதி, கோதாவரி. காவிரி, தாமிரபரணி, வையை. முதலிய நதிகள் அத்தனையும் சக்தியின் பேரருள்தான். இமயமலை முதல் கன்யாகுமரி வரை பற்பல தலங்களில் பற்பல நாமங்களில் பற்பல ருபங்களில் தேவி செய்யும் திருவிளையாடல்கள் ஏராளம். சக்திவழிபாட்டில் பற்பல பிரிவுகள் என்றலும். எல்லா வகையான நெறிகளையும் தன்பால் அடக்கிய வழிபாடு மாரி வழிபாடு ஆகும். மாரிவழிபாடு மகத்தான வழிபாடு. அதில் சர்வசக்தி படைத்த ராஜரீகம் புரியும் மாரிகள் அகிலாண்ட கோடி பிர்மாண்டாங்களை ஆண்டும், அருள்விளையாடல் பல புரிந்தும் உள்ளனர். வேதமந்த்ரங்களில் ஸ்ரீவாஞ்சிதார்த்த ப்ரதாயினி என்று போற்றப்படும் மஹாசக்தி. ராஜராஜேஸ்வரியாய் பூர்வம் ஒருகாலத்தில் இமயமலையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீசைலம்(திருமலை) என்ற இடத்தில் சிவனுடன் இருந்து, இமயமலைக்கு நிகரான தலமாகக் கொண்டு அருளாட்சி புரிந்தாள். மல்லிகை, முல்லை, சம்பங்கி, பாரிசாதம், மரிக்கொழுந்து, இருவாட்சி முதலான புஷ்பங்கள் பூத்துச்சொரிய கிளிகள் வேதமொழி புகல, குயில்கள் பாட, மயில்கள் ஆட, மான் துள்ளியோட. மகரிஷிகள் கடுந்தவம் புரிய மனிதரும், அமரரும், உரகரும், கந்தர்வரும் உவணரும் நித்தநித்தம் போற்றிக் துதிக் கும் தலம் ஸ்ரீசைலம். இந்த ஸ்ரீசைலத்தின் மகிமையை ஆயிரம்நாவுபடைத்தா ஆதிசே ஷானைம் சொல்ல இயலாது. பூர்வம் ஒரு காலம் சூதபுராணீகர் னநமிசாரண்யத்தில் இருபத்தாறுயிர மகரிஷிகளுக்கு திருமலை வேண்டவராசியம் மன் மகிமையை யாதென விளக்குமாறு கேட்டனர். தக்ஷிண பாரதத்தை தானைளும் பகுதி யாய்க்கொண்டதாலும் தக்ஷிண கயிலாயம் என்ற ஸ்ரீசைலத்தை சிவனுடன் சேர்ந்திருக்கும் தல மாகக் கொண்டதாலும் இவள் தக்ஷணையனத் தைத் தனது பவனியாகக் கொண்டுள்ளாள். ஆதலின் ஆடித்திங்களில் அனைவரும் வழிபடுவர். மனிதர் சாமான்யவழிபாடு வேத முறைப்படி தேவரும் முனிவரும் வழிபாடு செய்த புராதன சக்தியாகி விளங்கும் இவள் வைவஸ்வத மன்வந்தரத்தில் கலியுகத்தில் கந்தரவர், யக்ஷர், கோரிக்கைக்கிணங்க, தொண்டவள நாட்டில் நெல்லி வண்ணம் எழுந்தருளுவேன் என்று அருளிய வண்ணம் நெல்லிகுப்பத்தில் எழுந் தருளியுள்ளாள். பூரண சிவசக்தியாய், பூர்வத்தில் இருந்த இவள், இங்கு பூர்ணமான வைஷ்ணவியாய், மாரியாய், போர்க்கோலங்கொண்ட துர்க்கைளாள். இவள் 64 திருவிளையாடல்களும் புரிகின்றவள். அறுபத்துநான்கு கலைப்பீடத்துக்கு உரியவள். 64 மூர்த்தங்களாக விளங்குபவள். விந்தியமலையை அகத்தியர் அடக்கிய காலத்தில் தென்கயிலாயமாக ஸ்ரீவாஞ்சிதார்த்த ப்ரதாயினீ என்று வேதமந்த்ரங்கள் கோஷிக்கும் இந்தச் சக்தி வரலாறு கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும், நினைப்பவர்களுக்கும் இஷ்டசித்திதரும். ஆதிகாலத்தில் நாகலோகக் கன்னியர்கள், பாரததேசத்தின் வளப்பங்காண இமயமலை முதல் சஞ்சரித்து சேதுவை நோக்கிச் செல்லும்போது ஸ்ரீசைலத்தில் (ஆந்திரப் பிரதேசத்தில்) வரும் போது தங்களை அறியாது மெய்சிலிர்த்தனர். கண்கணில் நீர் அரும்பியது. ஏதோ ஒரு பாசம்! வாத்சல்யம்! பிரேமை! புத்துணர்ச்சி! உத்வேகம் உற்சாகம் தோன்றியது. அவர்கள் இது பராசக்தியின் திருவிளையாடல் என்றுஎண்ணிய போது ஸ்ரீநாரதமுனிவர் அங்கு தோன்றினர். கன்னியர்களைப் பார்த்துச் சொல்லானர். இங்கு உள்ள பராசக்தி சுலபமாக மக்களுக்கு ஈடேறும் மார்க்கத்தை அருள்பவள் இஷ்டகாம்யத்தை எளிதில் அருள்பவள், இவள்தான் சும்பநிசும் பரை வதைத்தவள் பண்டாசுரவதம் செய்தவள். அவுணர் குலத்தை வேரறுத்தவள் மஹாமாயையாக விளங்கி, சூரிய, சந்திர, அக்கினி என்னும் மூன்று வகைப்பட்ட க்ஷத்திரியர்களுக்கு ராஜரீகந் தந்தவள் காமேஸ்வரி என்றும், வாஞ்சீ தார்த்த ப்ரதாயினி என்றும் சொல்லப்பட்ட இவள், நாகலோகத்தவராகிய உங்களால் பூஜிக் கப்பட விருக்கிற்ள். இவள் விர்த்தாத்தம் நாகலோகம் அறியச் செய்வீர்! என்று உரைத்து, ஸ்ரீதேவியினிடத்தில் அழைத்துச் சென்று பிரார்த்தித்தனர். ஓங்கார நாதத்தில் முளைத்தெழுந்த உத்தமி, ரீங்காரி, வேதமூலப்பரம்பொருளே! பிர்ம, விஷ்ணு, ருத்ர, மஹேஸ்வர, சத சிவாதிகள் போற்றப்படும் வித்தகி, அஷ்டதிக்பாலகர்களும், நவராத்திரித்திருநாளில் வழிபட்டு ஸ்ரீசைலத்தில் வரம்பெற்றர்களே! நவசத்தி! என்றெல்லாம் போற்றவும், தேவி திருமுடிமீது இருந்த மலர் கீழே விழுந்து இதன் ரகசியம் என்ன என்று நாகலோகக் கன்னியர்கள் கேட்க, உங்கள் லோகத்து மாணிக்கமுடிபூண்ட நாகராஜன் வந்து வழிபட்டால் இதன் விர்த்தாந்தம் விளங்கும் என்றர். கன்னியர்கள், நாகலோகத்துக்குச் சென்று செய்தி அறிவித்தனர். ஆதிசேஷன், கார்க்கோடகன், வாசுகி, குளிகன், அனந்தன் முதலான நாகராஜாக்கள் அனை வரும் வந்து வழிபட அருள் ஒளி தெரிந்தது. அருள் ஒளிகண்ட போதும், தேவி திருமுடிமீது இருந்து புஷ்பம் ஒன்று கீழே விழவும் விளக்கில் ஒளி பிரகாசிக்கவும் கண்டனர். கண்ட ஐவரும் ராமநாம மாகியதாரகமந்திரத்தை இடைவிடாது ஜபித்துக் கொண்டிருந்தனர். தண்டகாரண்யம் என்று தொண்டவள நாட்டு ஞாபகம். அநுனும் வீரமாருதி, நெல்லி வனங்கண்டு பாதம் நாட்டி மலைமீது அமர்ந்தோன் என்ற செய்தி ஞாபகம், தேவி இவர்கள் மனநிலை அறிந்து ஸ்ரீசைலத்திலிருந்து தண்டகாரண்யத்தை நெல்லி வனத்தைச் சிந்தித்தாள். ஒருகாலத்தில் உங்கள் ஐவரையும் கொண்ட நாகபீடமாகக்கொண்டு, பஞ்சபூதங்களும் உடன்பணிபுரிய ராஜ ராஜேஸ்வரியாக வீற்றிருந்தருள் புரிவேன் என்று அருளினள். அதுவரை உங்களைப் போன்று நானும் நாகரூபங் கொண்டு நெல்லி வனத்தில் புற்றுருவாய் அமர்வேன். கலியுகத்தில் பிறைவழிபாடு செய்யும் அன்பர்களால் சாம்ராஜ்ய நிலை மாறும்போது என் திருவிளையாடல் உலகுக்கு அறியச் செய்வேன் என்று உணர்த்தினள் அதுவரை அவள் செய்த திருவிளையாடல். தேவி அருளிய வண்ணம் புறப்பட்டுவரும் போது விஜயவாடா, ஓங்கோல் பல்லாரி முதலான பற்பல இடங்களில் பற்பல அற்புதம் புரிந்தாள். பற்பலநாமரூபங் கொண்டதை வர்ணிக்க யாரால் இயலும்? பல்லாரியம்மன், கனகதுர்க்கை, செங்காளம்மன் முதலிய திருநாமங்களும் குணதிசயங்களும் விரித்தால் பெருகும். வேண்டவராசியம்மன் வேடுவர், மறவர் மீனவர் முதலானவர்களால் போற்றப்பட்டாள். ஆங்காங்கு அருள் விளையாடல் புரிந்தாள். ஸ்ரீசைலத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்ட நாகநம்பி என்ற மகாராஜனுக்கு மகளாக அவதரித்தாள். நாகராஜகுமாரி, நாகாபரணி, நாகபூஷணி, நாகபீடசக்தி என்றெல்லாம் போற்றப்பட்டாள். ஐந்துதலை நாகம் அணி செய்ய உடுக்கையும், வாளும், திரிசூலமும் பொற்கிண்ணமும் தாங்க சிங்கவாகனத்தில் அமர்ந்து வரும் தேவி, பவானி என்ற திருநாமம் பெற்று பெரியபாளைத்தில் பாளையத்தரசர்கள் வழிபாட்டுக்கு உகந்து அருள்புரிந்தாள். திருப்பதியில் புற்றுருவாய் ஸ்ரீகிருஷ்ணஸர்ப் பருபங்கொண்டு அமர்ந்து, கங்கை என்ற திருநாமம் தரித்து அருளாட்சி புரிந்தாள். காளஹஸ்தி அங்காளியாய் காட்சி தந்தாள். எருமைவெட்டிப்பாளையத்தில் மஹிஷாசூரமர்த்தனம் என்ற தலத்தில் அங்காளியானள். திருமுல்லைவாயிலில் பச்சையம்மனக, திருவொற்றியூரில் வடிவுடையம்மனக விளங்கினள் தொண்டவள நாட்டில் திருவேற்காட்டில் புற்றுருவாய்க் காட்சி தந்து நாகதேவதையாக விளங்கினள். காஞ்சீபுரத்தில் கருக்கில் அமர்ந்தவளாக விளங்கினள். ஊத்துக்காடு எல்லையம்மனய் விளங்கினள். படவேட்டில் படைவீடு கொண்டாள். ஆரணியில் அணி வகுத்தாள். மானம்பதியில் சோழிவிளையாடினள் செஞ்சியில் ரங்கநாதனைக் கண்டாள். திருவண்ணமலையில் பச்சை மலைநாயகியாகக் காட்சி தந்தாள். சக்ரமல்லூரில் வயல்வெளியில் கன்னியாகக் காட்சி தந்தாள் மலையனூரில் அங்காளியானள். பாங்குளத்தூரில் பச்சையம்மனகி பாலாற்றங்கரையில் மணப்பாக்கம் கன்னியானள். பிறகு ஆதியில் அருளிய வண்ணம் நெல்லிவனத்தில், கந்தர்வர் போற்ற, அருளாட்சி துவங்கினள். துவாபரயுகத்தில் சந்தனு மகாராஜன் கண்ட நெல்லிவனத்தை பற்பல மகாராஜாக்கள் வழிபட்டனர். முனிவர்களும் சித்தர்களும் போற்றினர். அதுவரை புற்றில் நாகரூபம் கொண்டாள். இந்த இடத்தில் தான் பிற்காலத்தில் பிறைவழிபாடு செய்பவர்கள் அரசாளும் காலத்தில் நெல்லிவனத்தில் குடி கொள்வேன் என்றபடி திருக்கோயில் கொண்டாள்



அருள்மிகு சக்தி விநாயகர்

நமது கணபதி சிலை ஒரு எடம்புரி விநாயகர் (இடது பக்கத்தில் உள்ள தும்பிக்கை). மகா கணபதி ஹோமம் விநாயகர் சதுர்த்தி அன்றும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாளில் அபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது



அருள்மிகு சீனிவாச பெருமாள்

ஸ்ரீ சீனிவாச பெருமாள் தாமரையின் இதழ்களில் நிற்கும் தோரணையில்(நின்ற திருக்கோலம்) . அருள்மிகு ஸ்ரீனிவாஸ் பெருமாளின் கீரிடம் வைரக்கற்கள் பொருத்தி பலரையும் கவர்கிறது. நமது கோயிலின் பிரதான தெய்வத்திற்காக திருமஞ்சனம் (புனித குளியல்) செய்யப்படுகிறது. நமது கோவிலில் திருமஞ்சனத்திற்கு பயன் படுத்தும் ஒவ்வொரு பொருளும் சிறப்பு குணங்கள் நிறைந்தவை. தெய்வத்திற்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், கலப்பு தூள், பஞ்சமிர்தம், தேன் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இது தெய்வத்திற்கு குளிர்ச்சியை தரும். கருடன் பொதுவாக பெரிய திருவடி என அழைக்கப்படுகிறார், பெருமாளின் எல்லா அவதாரங்களிலும் பெருமாளுக்கு சேவை செய்ய நிறுவப்பட்டுள்ளது



அருள்மிகு விஷ்ணு துர்கை அம்மன்

துர்கா அம்மன் வடக்கு நோக்கி உள்ளது, ஒவ்வொரு இந்து வீட்டிலும் துர்கை அம்மனை பிரதான கடவுளில் ஒருவராக வணங்குகிறார்கள். ஏனென்றால், நாம் எதிர்கொள்ளும் கிட்டத்தட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் துர்கை அம்மன் பரிஹாரம் மூர்த்தி மற்றும் ரகு பகவானின் தீய விளைவு மற்றும் உங்கள் அன்றாட வேலையில் உள்ள தடைகள் ஆகியவற்றக்கான பரிஹர மூர்த்தி துர்கை அம்மன். துர்கை அம்மனை வழிபட்டால் உங்கள் வீட்டில் பல நல்ல விஷயங்கள் நடப்பதைக் காணலாம்



அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா

தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கார்த்திகை தீபம் ஆகியவற்றில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சஷ்டி பூஜையில் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் தை பூசம் ஆகியவை பிரமாண்டமாக கொண்டாடப்படுகின்றன



அருள்மிகு நாகராஜா & நாகயக்ஷி

இந்து புராணங்களில் ஒரு நம்பிக்கை உள்ளது, உங்கள் பிறந்த நட்சத்திரத்தில் நாக தோஷம் இருந்தால், இந்த நாக தோஷத்திலிருந்து விடுபட நீங்கள் ஏதேனும் ஒரு விசேஷ கோவிலுக்குச் செல்ல வேண்டும். ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு வழிபாடு செய்ய நமது கோவில் பரிகார ஸ்தலமாக உள்ளது. மாத ஆயில்ய பூஜை மற்றும் கருட நாகபஞ்சமி செய்யப்படுகிறது


நாலம் தரும் நவகிரகம்

நவகிரகங்கள் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் ஒன்பது அண்ட பொருள்கள். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், மங்கள், புதன், ப்ரிஹஸ்பதி, சுக்ரன், சனி, ராகு மற்றும் கேது உள்ளது. சூரியன் ஒரு நட்சத்திரமாக இருக்கும்போது, மங்கள், புதன், ப்ரிஹஸ்பதி, சுக்ரன் மற்றும் சனி ஆகியவை சூரிய மண்டலத்தின் கிரகங்கள். ராகு மற்றும் கேது சந்திரனின் வடக்கு மற்றும் தெற்கு முனைகள். மலர்கள், விளக்கு ஏற்றுவது, துணி போன்றவை வழக்கமான வழிபட்டு முறைகள்


தெய்வங்கள்