முகப்பு
கோயில் ▼
வரலாறு
தெய்வங்கள்
மேலாண்மை
போற்றி
கேலரி ▼
புகைப்படங்கள்
வீடியோக்கள்
பாடல்கள்
ஊடகம்
தொடர்பு கொள்ள
பதிவு
மொழி ▼
தமிழ்
ஆங்கிலம்
போற்றி
108 போற்றி
ஓம் அகர முதலெழுத் தானாய் போற்றி ஓம்
ஓம் அருள் உருவாயொளிர் அன்னையே போற்றி ஓம்
ஓம் அண்டமும் அவனியு மானய் போற்றி ஓம்
ஓம் அமரருங் காணா ஆதியே போற்றி ஓம்
ஓம் அன்பே போற்றி அறிவே போற்றி ஓம்
ஓம் இன்பே போற்றி எழிலே போற்றி ஓம்
ஓம் துன்பந் துடைக்கும் துர்க்கை போற்றி ஓம்
ஓம் துரியத் தொள்ளொளிர் சோதியே போற்றி ஓம்
ஓம் சங்கடந் தவிர்க்கும் சங்கரி போற்றி ஓம்
ஓம் மங்களம் அளிக்கும் மாரி போற்றி ஓம்
ஓம் சிங்கவா கனத்தமர் தேவீ போற்றி ஓம்
ஓம் சூலம் ஏந்திய சுந்தரி போற்றி ஓம்
ஓம் காலங் கடந்த காரணி போற்றி ஓம்
ஓம் காலனை வெல்லும் காளி போற்றி ஓம்
ஓம் மூலமும் முடிவும் அற்றாய் போற்றி ஓம்
ஓம் ஞாலம் ஆளும் நாரணி போற்றி ஓம்
ஓம் வேதத் துள்ளொளிர் வித்தகி போற்றி ஓம்
ஓம் நாதத் துள்ளொளிர் நாயகி போற்றி ஓம்
ஓம் பாதம் பணிந்தோர்க் கருளுவை போற்றி ஓம்
ஓம் பயங்கரி போற்றி பார்வதி போற்றி ஓம்
ஓம் எண்ணும் எழுத்துமா யானுப் போற்றி ஓம்
ஓம் பண்ணும் இசையாய் பரந்தாய் போற்றி ஓம்
ஓம் ஆதி நாரணர்க் கிளையாய் போற்றி ஓம்
ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி ஓம்
ஓம் பாரத சக்தி பவானி போற்றி ஓம்
ஓம் நாரத காணம் நயந்தாய் போற்றி ஓம்
ஓம் மாரதர் போற்றும் மாலிணி போற்றி ஓம்
ஓம் மால்தவிர்த் தாளும் மாரி போற்றி ஓம்
ஓம் மலைமக ளாய்வரும் மங்காய் போற்றி ஓம்
ஓம் கலைமகட் கருளிய கருணையே போற்றி ஓம்
ஓம் அலைமகள் போற்றும் அம்பிகை போற்றி ஓம்
ஓம் நிலையுணர் வளிக்கும் நிமிலி போற்றி ஓம்
ஓம் நித்திய தத்துவ நிர்க்குணி போற்றி ஓம்
ஓம் வித்தகி விமலி வீரையே போற்றி ஓம்
ஓம் தந்திரங் கடந்த சற்குணி போற்றி ஓம்
ஓம் தந்திர முணர்த்தும் தற்பரி போற்றி ஓம்
ஓம் மந்திரங் கடந்த மாரி போற்றி ஓம்
ஓம் மந்திரம் உணர்த்தும் மாதேவி போற்றி ஓம்
ஓம் எந்திரங் கடந்த எண்குணி போற்றி ஓம்
ஓம் யந்திரம் உணர்த்தும் ஈஸ்வரி போற்றி ஓம்
ஓம் கலைதரும் தேவி காரணி போற்றி ஓம்
ஓம் கலையொலந் தானாய் அமைந்தாய் போற்றி ஓம்
ஓம் ஏழிசைச் குருவும் எழுந்தாய் போற்றி ஓம்
ஓம் எழுநாடி யுறையும் எழிலரசி போற்றி ஓம்
ஓம் எழுகன்னி யாயுறும் தேவியே போற்றி ஓம்
ஓம் எழுசக்தி யாய்வரும் ஏகமே போற்றி ஓம்
ஓம் எழுகடல் ஆளும் எம்பிராட்டி போற்றி ஓம்
ஓம் எழுலோகம் காக்கும் எண்குணி போற்றி ஓம்
ஓம் எழுமுனி போற்றி என்னரசி போற்றி ஓம்
ஓம் ஏழுமலை வாழ்வோன் தங்காய் போற்றி ஓம்
ஓம் திருமலை யரசன் மகளே போற்றி ஓம்
ஓம் எழில்மலர் வந்த ஏந்திழை போற்றி ஓம்
ஓம் சிவகாம சுந்தரி தேவி போற்றி ஓம்
ஓம் தவயோகர்க் கருள் சத்தியே போற்றி ஓம்
ஓம் கந்தவர்க் கருளிய காரணி போற்றி ஓம்
ஓம் மகத்துவம் பலபுரி மாதேவி போற்றி ஓம்
ஓம் இகபர சுகந்தரும் தேவியே போற்றி ஓம்
ஓம் சகமாபை நீக்கும் தயாபரி போற்றி ஓம்
ஓம் யுகந்தொறும் காக்கும் உத்தமி போற்றி ஓம்
ஓம் மகத்தி யேற்கும் மாதங்கி போற்றி ஓம்
ஓம் எழுசக்தி வடிவம் கொண்டோய் போற்றி ஓம்
ஓம் எழுச்சியாய் சூலம் ஊன்றினை போற்றி ஓம்
ஓம் புற்றினில் அமர்ந்த பூரணி போற்றி ஓம்
ஓம் நற்றவர் உளமுறை நாரணி போற்றி ஓம்
ஓம் குற்றங் களையும் கோவே போற்றி ஓம்
ஓம் செற்றம் தவிர்ந்தோர் நீர்மதி போற்றி ஓம்
ஓம் வேம்பிலைச் செல்வி வாலையே போற்றி ஓம்
ஓம் மாம்பொழில் நெல்லி வனத்தாய் போற்றி ஓம்
ஓம் கணந்தோறும் காக்கும் காளி போற்றி ஓம்
ஓம் கணபதிக் கருளிய கருணையே போற்றி ஓம்
ஓம் ஓமெனும் எழுத்தில் உறைவாய் போற்றி ஓம்
ஓம் ஓமெனும் பிரணவ மணியே போற்றி ஓம்
ஓம் ஓம்சக்தி யோதுநர்க் காளுவோய் போற்றி ஓம்
ஓம் ஓங்கார நாதத் தேவியே போற்றி ஓம்
ஓம் திருவிளக் கொளிரும் தேவியே போற்றி ஓம்
ஓம் திருநெறி யளிக்கும் செல்வி போற்றி ஓம்
ஓம் கதிர்மதித் தீவிழி பெற்றனை போற்றி ஓம்
ஓம் மதியணி வேணி மங்காய் போற்றி ஓம்
ஓம் மதியெலாந் தரும்பெருங் கருணையே போற்றி ஓம்
ஓம் விதிக்கும் விதிவகு வித்தகி போற்றி ஓம்
ஓம் வீரத் தேவி வாலையே போற்றி ஓம்
ஓம் மாந்தர்க் கருளும் மாரியே போற்றி ஓம்
ஓம் சங்கரி போற்றி சாரதை போற்றி ஓம்
ஓம் மங்களந் தருமொரு மாலினி போற்றி ஓம்
ஓம் வித்யா தத்துவ் வீரையே போற்றி ஓம்
ஓம் புத்தியும் பத்தியும் அளிப்போய் போற்றி ஓம்
ஓம் மல்லிகை முல்லை மணத்தோய் போற்றி ஓம்
ஓம் சொல்லும் பொருளும் ஆனாய் போற்றி ஓம்
ஓம் சுந்தரி போற்றி சுமங்கலி போற்றி ஓம்
ஓம் அந்தரி போற்றி ஆரணி போற்றி ஓம்
ஓம் மந்திர மாரி மகமாயி போற்றி ஓம்
ஓம் தந்திரத் தேவி தற்பரி போற்றி ஓம்
ஓம் சக்தியும் யுத்தியும் தருவாய் போற்றி ஓம்
ஓம் பக்தியும் முக்தியும் ஈவாய் போற்றி ஓம்
ஓம் நாகம் அணிந்த நாயகி போற்றி ஓம்
ஓம் நாக வடிவுறும் நாரணி போற்றி ஓம்
ஓம் சோக ரோகத் தீர்ப்பாய் போற்றி ஓம்
ஓம் ஆகமக் கலையொளிர் ஆதியே போற்றி ஓம்
ஓம் கருத்துக் கெட்டா கலையே போற்றி ஓம்
ஓம் கருத்தெலாம் தந்தருள் கருணையே போற்றி ஓம்
ஓம் வேம்பால் வினையைத் தீர்ப்பாய் போற்றி ஓம்
ஓம் சாம்பரால் வாழ்வளி சங்கரி போற்றி ஓம்
ஓம் மாரி போற்றி மாலினி போற்றி ஓம்
ஓம் வீரியே போற்றி விமலி போற்றி ஓம்
ஓம் நெல்லி வனத்துறை நீலீ போற்றி ஓம்
ஓம் நாரணி போற்றி நாயகி போற்றி ஓம்
ஓம் வேண்டிய வரங்களை அளிப்பாய் போற்றி ஓம்
ஓம் வேண்டவ ராசித் தேவி போற்றி ஓம்