வரலாறு


500 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ராஜதனமாக இருத்தபோது ஸ்ரீசைலம் அருகே கெண்டிகேட்டா கிராமத்தில் குடியிருந்த தெலுங்கு மக்களுடைய குலதெய்வமாக இருந்த அம்மன் நெல்லிக்குப்பம் ராம் மலையில் சுயம்புவாக குடியேறி மாடுமேய்த்து கொண்டிருந்த சிறுவனுக்கு கட்சி கொடுத்தார். அச்சிறுவன் கிராமத்திற்கு வந்த பெரியவர்களிடம் கண்டதை கூறினான். பெரியவர்கள் மலைக்கு சென்று அம்மனை தரிசித்து வியந்தனர். பிறகு அம்மனை மலையில் இருந்து மாட்டு வண்டியில் எடுத்துகொண்டு கிராமத்திற்கு வந்தபோது வழியில் அந்த மாட்டு வண்டியின் அச்சு முறிந்து நின்றுவிட்டது. அச்சமயம் ஒரு சிறுமிக்கு அம்மன் அருல் ஏற்பட்டு இந்த இடத்தில் கோயில் (தற்போது திருக்கோயில் உள்ள இடம்) எற்படுத்த வேண்டும் என்று அருள்வாக்கு வழங்கியதால் ஊரில் இருந்தவர்கள் சிறிய கோயிலை கட்டி அம்மனுக்கு "ஸ்ரீ வேண்டவராசி" என பெயர் வைத்து தங்களுடைய குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தில் வாஞ்சி தார்த்த ப்ரதாயிணி என்று அழைக்கப்படும் தேவி நம் அன்னை வேண்டவராசியே - நெல்லிவனத்தேவியே ஆவார். இப்புனித தலம் திருத்தொண்டை நாட்டின் காஞ்சி மாவட்டத்தில் திருக்கடல் மல்லை(மாமல்லபுரம்) திருவிடந்தை, திருநீர்மலை, திருசிங்கபெருமாள்கோவில் ஆகிய வைணவ திவ்ய தேசங்களுக்கும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், திருவிடைச்சுரம், திருஅனுமந்தபுரம் ஆகிய சிவதலவ்களுக்கும் இடையில் நடுநாயகமாய் விளங்கும் புண்ணிய திருத்தலமாக நெல்லிக்குப்பதில் நெல்லிவனத்தேவி ஸ்ரீவேண்டவராசி அம்மன் அருளாட்சி புரிந்து எண்ணற்ற குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கி அபிமான அடியார்களுக்கு கருணைபுரிந்து வருகிறாள். நமது முன்னோர்கள் குலதெய்வமாக வழிபட்டுவந்த தாய்க்கு ஆண்டுதோறும் விழா நடத்த எண்ணி 1960-ம் ஆண்டு முதல் பெரியோர்களால் ஆடி மதம் 2வது ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொண்டாடப்பட்டது. 1980-ம் ஆண்டு முதல் கோயில் திருவிழாக்களை சிறப்பாக நடந்த அன்னை வேண்டவராசி சேவா சமாஜம் என்ற பெயரில் அமைத்து சிறப்பாக நடத்தி வந்தார்கள். 1983-ம் ஆண்டு முதல் திருக்கோயில் நித்திய பூஜைகள் கோவில் பணிகள் மேலும் செவ்வென நடத்த ஸ்ரீ அன்னை வேண்டவராசி தினசரி அறக்கட்டளை என்ற பெயரில் நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் முன்னிலையில் திருவேற்காடு ஸ்ரீதேவி உபாசகர் ஸ்ரீமத் ஸ்வாமி ராமதாஸர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு அருளாசி வழங்கினார்கள். நபர் ஒருவருக்கு ரூபாய் 301/- வீதம் வசூலித்து வைப்பு தொகையாக செலுத்தி அதில் இருந்து கிடைக்கும் வட்டியை கொண்டு கோயில் நித்தியபூஜைகள், பணிகள் செய்யப்பட்டது. 2004-ம் ஆண்டு அண்ணா ஸ்ரீவேண்டவராசி தினசரி அறக்கட்டளையும் அன்னை வேண்டவராசி சேவா சமாஜமும் சேர்ந்து திருக்கோயில் திருப்பணியில், ராஜகோபுரம் கட்டும் பணியும் அருள்தரும் திருவேங்கடமுடையன் சீனிவாச பெருமாள் சன்னதி, அருள்தரும் சக்தி விநாயகர், அருள்தரும் வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணியர், அருள்தரும் விஷ்ணுதுர்கை, நலம் தரும் நவகிரகங்களின் சன்னதி ஆகியவைகள் தனித்தனியாக அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி அன்னை வேண்டவராசி அம்மனுக்கும், ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும், தெய்வங்களுக்கு வேலூர் திருமலைகோடி ஸ்ரீநாராயணிபீடம், ஸ்ரீபுரம் தங்கக்கோயிலை நிர்மாணித்து அருள்சக்தி அம்மா அவர்களின் பொற்கரத்தால் பிரதிஷ்டை ஆகம விதிப்படி மகா கும்பாபிஷேகம் நடத்தி அம்மா அவர்கள் நல்லாசி வழங்கினார்கள். அன்னையின் திருக்கோயில் பணிகள் நித்தியபூஜைகள் நிர்வாகப்பணிகள் சிறப்பாக நாத்திட இரு அமைப்புகளையும் ஒன்றுசேர்த்து அன்னை வேண்டவராசி சேவா அறக்கட்டளை என்ற பெயரில் நிர்வாகிகளை ஏற்படுத்தி தற்போது நடைபெற்று வருகிறது. தினசரி பூஜைகள் நடபத்தற்காக முன்பு வசூலித்த தொகை ரூ.310/- தற்போது ரூ.1500/- ஆக உயர்த்தியுள்ளனர். இப்பணம் செலுத்துபவர்கள் ஆயுள் உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டு பிரதி ஆண்டு அவர்களுடைய பெயரில் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ள ஒருநாள் நித்யபூஜை நடைபெறுகிறது. பிரதி ஆண்டு ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அறக்கட்டளையின் சார்பில் அன்பர்களின் பெரும் உதவியுடன் ஆடிப்பெருவிழா பக்தர்களுக்கு நாராயணி சேவையுடன் (அறுசுவை அன்னதானம்) கலை இலக்கியத்துடன் விழா சிறப்பாக நடைபெறுகிறது. (ஆடி, ஆவணி) 6 வாரங்களில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் 2 கால பூஜைகள், சித்திரை மாதம் முதல் தேதி தமிழ் புத்தாண்டு அபிஷேகம், ஆராதனை, பஞ்சாங்கம் வாசித்தல், ஆணி மாதம் ஆணித்திருமஞ்சனம், ஆடிமாதம் ஆடிப்பெருவிழா மற்றும் 6 வாரங்கள் திருவிழா, ஆடிப்பூரம், வரலட்சுமி விரதம், ஆவணி மாதம் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி, புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமை திருமஞ்சனம், நவராத்திரி உற்சவம், விஜயதசமி விழா, ஐப்பசி மாதம் தீபாவளி அபிஷேகம், கேதார கௌரிவிரதம், லட்சுமி குபேரபூஜை, கந்த சஷ்டி, கார்த்திகை மாதம் சர்வாலய தீபம், மார்கழி மாதம் தனுர்மாத பூஜை, ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, ஆங்கில புத்தாண்டு சிறப்பு அபிஷேகம், தை முதல்நாள் பொங்கல் பண்டிகை, பங்குனி மாதம் யுகாதி அபிஷேகம் (தெலுங்கு புத்தாண்டு) பங்குனி உத்திரம், பிரதிமதம் பௌர்னமி சிறப்பு அபிஷேகம், அமாவாசை அபிஷேகம், சங்கடஹரசதுர்த்தி, கிருத்திகை, திருவோணம், விஷ்ணுதுர்கை வழிபாடு, பிரதி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு ஆராதனை ஆகியவை உபயதாரர்கள் மூலம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

திருமண பரிகார ஸ்தலம்:
திருமணம் ஆகாதவர்கள் ஸ்ரீவேண்டவராசி அம்மனை தரிசனம் செய்து ஸ்தல விருட்சமான நெல்லிமரத்தில் திருமாங்கல்ய சரடு கட்டி அம்மனை அர்ச்சனை செய்து முழுதேங்காய், எலுமிச்சம் பழம் பெற்று வீட்டில் பூஜை செய்து வந்தால் திருமணம் கைகூடுகிறது.

குழந்தைபேறு தரும் இடுக்கி அம்மன்:
இக்கோயிலில் பழமை சுவரில் குழந்தையினை சுமந்து நிற்கும் தாயாக இடுக்கி அம்மன் உள்ளார். இத்தாயினை 9 வாரங்கள் வந்து அர்ச்சனை செய்து வழிபட்டு மற்றும் 3 பௌர்ணமி நாட்களில் கோயிலுக்கு வந்து நெல்லி மரத்தில் தொட்டில்கட்டி அம்மனுக்கு அர்ச்சனை செய்து எலுமிச்சம்பழம் பெற்று வீட்டில் பூஜை செய்து வந்தால் குழந்தைபேறு பெறுகின்றனர்.



2023

அன்னை வேண்டவராசி சேவா அறக்கட்டளை டிரஸ்ட்:
அன்னை வேண்டவராசி சேவா அறக்கட்டளை டிரஸ்ட் உருவாக்கப்பட்டு கோயில் தொடர்பான பணிகளைப் பராமரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது..

2023

அன்னை வேண்டவராசி சாரிடபிள் டிரஸ்ட்:
அன்னை வேண்டவராசி சாரிடபிள் டிரஸ்ட் கோயில் தொடர்பான மற்றும் அறப்பணிகளை பராமரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2022

நவீகரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் (அனைத்து தெய்வங்களுக்கும்):
அஷ்ட என்றால் சமஸ்கிருதத்தில் 8 மற்றும் பந்தனம் என்றால் கட்டுதல் அல்லது நிர்ணயித்தல். அஷ்டபந்தனம் என்பது அதன் பீடத்தில் (பீடம்) களிமண் போன்ற 8 மூலிகைகள் கலந்து மரப்பாறை, சுண்ணாம்பு தூள், பிசின், செம்பருத்தி, தேன் மெழுகு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஐகானைப் பொருத்தும் செயல்முறையாகும். பேஸ்ட் சுமார் 2 செமீ தடிமன் கொண்ட நீண்ட ரோல்களாக உருவாக்கப்பட்டு, ஐகானின் அடிப்பகுதியைச் சுற்றி நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது, இதனால் சிமென்ட் செய்யப்பட்ட மூட்டுகள் நீர்ப்புகாவாக மாறும். இந்த செயல்முறை 12 ஆண்டுகளுக்கு ஐகானை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது. பந்தனம் தங்கத்தால் (ஸ்வர்ணபந்தனம்) செய்யப்படும் போது, ​​தெய்வத்தின் புத்துணர்ச்சியூட்டும் சக்தி 100 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நம்பப்படுகிறது தற்பொது நவீகரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூன் 2022 இல் நடைபெற்றது.

2007

நவீகரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் (அனைத்து தெய்வங்களுக்கும்):
திருமயிலக்கொடி ஸ்ரீ நாராயணபீடம், ஸ்ரீபுரம், வேலூர், பொற்கோயில் கட்டிய அருள்சக்தி அம்மா, ராஜகோபுரம் மற்றும் அன்னை வேந்தவரசி அம்மன் சன்னதிகள் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் செய்து ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்தார்.

2004

ராஜகோபுரம் கட்டுதல்:
அன்னை ஸ்ரீ வேந்தவரசி நாளிதழ் அறக்கட்டளை மற்றும் அன்னை வேந்தவரசி சேவா சமாஜம் ஆகிய இரண்டும் இணைந்து அருளும் திருவேங்கடமுடையான் ஸ்ரீநிவாசப் பெருமாள், அருள் சக்தி விநாயகர், அருளும் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், அருள்பாலிக்கும் விஷ்ணு துர்க்கை, நவகிரகம் அருள்பாலிக்கும் தனிச் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன அதனுடன் ராஜகோபுரம் கட்டப்பட்டது.

1983

ஸ்ரீ அன்னை வேண்டவராசி தினசரி அறக்கட்டளை:
திருக்கோயில் நித்திய பூஜைகள் கோவில் பணிகள் மேலும் செவ்வென நடத்த ஸ்ரீ அன்னை வேண்டவராசி தினசரி அறக்கட்டளை என்ற பெயரில் நீதியரசர் என். கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் முன்னிலையில் திருவேற்காடு ஸ்ரீதேவி உபாசகர் ஸ்ரீமத் ஸ்வாமி ராமதாஸர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு அருளாசி வழங்கினார்கள்.

1980

அன்னை வேண்டவராசி சேவா சமாஜம்:
பெரியோர்களால் மற்றும் நமது முன்னோர்கள் கோயில் திருவிழாக்களை சிறப்பாக நடந்த அன்னை வேண்டவராசி சேவா சமாஜம் என்ற பெயரில் அமைத்து சிறப்பாக நடத்தி வந்தார்கள்

1960

ஆடி திருவிழா :
நமது முன்னோர்கள் குலதெய்வமாக வழிபட்டுவந்த தாய்க்கு ஆண்டுதோறும் விழா நடத்த எண்ணி 1960-ம் ஆண்டு முதல் பெரியோர்களால் ஆடி மதம் 2வது ஞாயிற்றுக்கிழமை திருவிழா கொண்டாடப்பட்டது.